கள்ளக்காதலுக்காக பெற்ற மகளை கொன்று ஆற்றில் வீசிய கொடூர தாய்!!

கள்ளக்காதலுக்காக பெற்ற மகளையே கொன்று ஆற்றில் வீசிய தாயின் கொடும் செயல் தஞ்சாவூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சாவூர் கோரிகுளத்தில் பகுதியை சேர்ந்த ரங்கேஸ்வரன்,விஜயலட்சுமி தம்பதிக்கு நித்தியா என்ற 7 வயது மகளும், விக்னேஷ் என்ற 4 வயது மகனும் இருந்தனர். ரங்கேஸ்வரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இதனால் விஜயலட்சுமிதான் தனியே தனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வந்திருக்கிறார்.

கணவர் காலமாகிவிட்டதால் போதிய வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்திருக்கிறார் விஜயலட்சுமி. இந்த நேரத்தில் அண்ணன் முறை கொண்ட அவரது உறவினரான வெற்றிவேல் என்பவருடன் முறைதவறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் விஜயலட்சுமிக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்திருக்கிறார். நாளடைவில் இந்த பழக்கம் கள்ள உறவாக மாறியிருக்கிறது.

அண்ணன் முறை கொண்ட ஒருவரிடம் கள்ள உறவு வைப்பதா? என்று உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். வெற்றிவேலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது குடும்பத்தினரும் வெற்றிவேலை கடுமையாக கண்டித்து இருக்கின்றனர். ஆனாலும் அதையெல்லாம் அவர் சமாளித்து வந்திருக்கிறார்.

உறவினர்களை எப்படியோ இருவரும் சமாளித்து வந்துள்ளனர். ஆனால் வெற்றிவேல் -விஜயலட்சுமியின் கள்ள உறவுக்கு விஜயலட்சுமி 7 வயது சிறுமி இடையூறாக இருப்பதை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இருவரும் என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார்கள். பின்னர் கொன்றுவிடுவதான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.அப்போதுதான் நாம் உல்லாசமாக இருக்க முடியும் என்று கள்ளக்காதலன் சொல்ல, தாயும் அதுதான் சரியானது என்று முடிவெடுத்திருக்கிறார்.

திட்டமிட்டபடி ஏழு வயது சிறுமியை வெற்றிவேல் கொடூரமாக தாக்கி இருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி உயிரிழந்திருக்கிறார். அடுத்து, மகளை உடலை என்ன செய்வது என்று கள்ளக்காதலனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் விஜயலட்சுமி. கல்லணை கால்வாயில் கொண்டுபோய் வீசி விடலாம் என்று வெற்றிவேல் சொல்ல, அதுமாதிரியே இருவரும் செய்துள்ளனர்.

இதில் வெற்றிவேல் – விஜயலட்சுமி இருவரும் சிக்கியது எப்படி? தான் செய்த இந்த செயலை வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தன் மனைவியிடம் சொல்லி உயிரிழந்த சிறுமியின் புகைப்படத்தையும் மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல் மனைவி, கள்ளக்காதலியின் பிள்ளையை கொடூரமாக கொன்ற கணவன் நம் பிள்ளையையும் கொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்கிற அச்சத்தில் தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர்களிடம் இது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து விட, விஜயலட்சுமி -வெற்றிவேல் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version