நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றால் நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதில் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சனின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இந்நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவிற்கும் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் மும்பையில் அதிகம் வசிக்கும் பாலிவுட் பிரபலங்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவது அங்குள்ள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Exit mobile version