அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நாளை நடைபெறுகிறது.

புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நாளை காலை 11 மணிக்கு நடக்க இருக்கிறது.இதில் உடல்நல குறைவால் சிகிச்சைக்காக கோவா சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் இந்த செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பீகாரில் நடந்த தேர்தல் தோல்வி போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது.