மத்திய அமைச்சர் அமித்ஷா உடல்நிலை நிலவரத்தை வெளியிட்டது AIIMS மருத்துவ மனை…

உலகம் முழுவதும் கொரோனா நோய் மிகத்தீவிரமாக பரவிவருகிறது குறிப்பாக கொரோனா தடுப்பில் ஈடுபட்டு வரும் முன்களப்பணியாளர்களுக்கு அதிகமாக பரவுகிறது.

அந்த வகையில் மருத்துவர்கள், அமைச்சர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள், செய்தியாளர்கள் போன்றவர்களுக்கு அதிகமாக பரவுகிறது, மேலும் சினிமா துறையை சேர்ந்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் குணமடைந்த அவர் கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பின்னர் உடல் சோர்வு மற்றும் உடல் வலி அதிகமாக இருந்ததால், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ந்தேதி டெல்லி AIIMS மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதன் பலனாக அவர் தற்போது பரிபூரணமாக குணமடைந்துள்ளார் என்றும் இதனை யடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டெல்லி AIIMS தெரிவித்துள்ளது. அமித்ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது பா. ஜ. க தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version