ஆர்மேனியா நாட்டின் பிரதமர் நிகோக் பாஷின்யானின் மனைவி அன்னா ஹகோபியான் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாகோர்னா – காராபாக் மலைப்பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அசர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக மோதல் நடைபெற்று வருகிறது.
இருநாட்டுகளின் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் போர் பதற்றத்தைத் தணிக்க அமைதிப்பேச்சு வார்த்தை நடத்திய ரஷ்யாவின் முயற்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ஆர்மேனியா நாட்டின் அதிபர் நிகோல் பாஷியானின் மனைவி ஹகோபியான் 12 பெண்களுடன் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இப்பயிற்சி முடிந்ததும் அவர் ஆர்மேனிய நாட்டு எல்லையில் பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகிறது.