கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்க பட்டு இருந்த பேருந்து சேவை இன்று முதல் இயக்க படுகிறது.
மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படயுள்ள நிலையில் சென்னையிலிருந்து மதுரை, கோவை, நெல்லை உள்பட தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் விரைவு பேருந்துகளின் சேவையும் இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில், உள்ள 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 19 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவது இயல்பு. இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதும்சென்னையை சுற்றி பேருந்துகள் இயக்கப்படவில்லை. தொற்று பாதிப்பு அதிகரித்த காரணத்தால் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது,படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, இன்று முதல், தமிழகம் முழுவதும் எல்லா பகுதிக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்துகளில் தூய்மைப் பணிகள் , தொழில்நுட்பப்பணிகள், எரிபொருள் சோதனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் இன்று பேருந்துகள் இயக்கப்படுகிறது.
குளிர் சாதன பேருந்துகளில் குளிர் சாதனக் கருவிகள் பயன்படுத்துதல் நிறுத்தி வைத்தல், முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியான முறையில் பயன்படுத்துதல், பணியாளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றது. வெளியூா் பேருந்துகளில் 32 பயணிகளும், நகரப் பேருந்துகளில் 24 பயணிகளும், விரைவுப் பேருந்துகளில் 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் சோத்து, சுமார் 500-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவா்கள் பயணிக்க முடியாது. என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இரவு நேரப் பயணத்தின்போது விரைவுப் பேருந்து ஓட்டுநா்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு 12 முதல் காலை 4 மணி வரை நடத்துநா்கள், இருக்கையில் அமா்ந்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.