சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்… கொலிஜியத்திற்கு கடிதம் எழுதிய 237 வழக்கறிஞர்கள்!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என சென்னையை உயர்நீதிமன்றத்தின் 237 வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்கு கடிதம்.

டெல்லி, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில்
துணிச்சல் மிக்க, சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமை நீதிபதியை சிறிய உயர்நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றும்போது அதன் நோக்கத்தை அறிய நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது.

அதன்படி, 75 நீதிபகள் கொண்ட ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை, மிகச்சிறிய மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. ஏனெனில் கடந்த காலத்திலும் நீதிபதின் கருத்தை அறியாமல் இதுபோன்ற பணியிட மாற்றம் நடந்துள்ளது, பொறுப்பேற்று 10 மாதங்களே ஆன நிலையில் இந்த பணியிடமாற்றம் நடந்துள்ளது. எனவே, இந்த பணியிட மாற்ற விவகாரத்தில் வெளியே இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறதா ?

இதுபோன்ற திடீர் பணியிட மாற்றம் ஒரு நேர்மையான நீதிபதியின் மீதான நன்மதிப்பை பொதுவெளியில் குறைக்க வழிவகை செய்கிறது எனவும் மேலும் அதிக பணி அனுபவம் வந்த ஒரு நீதிபதியை மிகச்சிறிய ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது அவரின் அனுபவத்தை செயல்படுத்தவிடாமல் தடுப்பது ஆகும் என தெரிவித்து உள்ளனர்.

மேலும், குறுகிய காலத்தில் அடிக்கடி தலைமையை மாற்றுவது உயர்நீதிமன்ற செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், பல்வேறு முடிவகளை காலதாமதபடுத்தும். கொலிஜியம் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முடிவெடுத்து அதனை காலதாமதமாக நவம்பர் மாதத்தில் அறிவித்தது கொலிஜியத்தின் வெளிப்படை தன்மை, முடிவுகள் மீது கேள்வியை எழுப்புகிறது. எந்த பாகுபாடுமின்றி துணிச்சலாக செயல்படும் நீதிபதியை மாற்றுவது அல்லது முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது “எமர்ஜன்சி” காலத்தில் நடந்ததாகும். எனவே, தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜுயை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கொலிஜியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.

Exit mobile version