திண்டுக்கல் அருகே சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் : படக்குழுவினருக்கு அபராதம் விதித்ததால் அதிர்ச்சி!!

நத்தம் அருகே கொரோனா விதியை மீறி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்துள்ள கோணபட்டியில் கடந்த சில தினங்களாக புதுமுக நடிகர் நடித்துவரும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று நடந்த போதும் கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காமல் நடந்ததாக புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து அங்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வாசு உள்ளிட்ட காவல்துறையினர் பார்த்தபோது விதிமுறைகளை கடைபிடிக்காமல் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு செய்துகொண்டிருந்த படக்குழுவினருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.

Exit mobile version