நேற்று ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

நேற்று ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு – சற்றே ஆறுதலாக 37 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர்.


இந்தியா தினசரி கொரோனா பாதிப்பது மத்திய சுகாதார அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவை பொறுத்தவரை 27,254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பை விட சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் சிகிச்சையில் இருந்த 37,687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இவர்களோடு சேர்த்து இதுவரை மொத்தமாக 3,24,47,032 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 219 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும் இதுவரை உரியிலந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,874 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 53,38,945 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே 20 லட்சம் டோஸ் அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இதுவரை, 74,38,37,643 டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version