நெருங்கிய தீபாவளி… மோசமான நிலைக்கு சென்ற டெல்லி காற்றின் தரம்!!


டெல்லி முழுவதும் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது.

டெல்லி, டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவுக்கு சென்றதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் காற்றின் தரம் அடுத்த சில நாட்களுக்கு மேலும் மோசமான பிரிவில் இருக்கும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியை பொருத்தவரை அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய பயிர் கழிவுகள் காரணமாகவே பெரும்பாலும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது; நேற்றைய தகவலின் படி மாநிலத்தில் உள்ள மொத்த காற்று மாசு-வில் 46 சதவீத பங்கு விவசாய பயிர் கழிவுகளை எரித்ததன் காரணமாகவே ஏற்பட்டு இருக்கக்கூடும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். டெல்லியை பொருத்தவரை இன்றும் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரம் 283 ஆகவும், சாந்தினி சவுக் 201, ரோகினி 288, ஆர் கே புரம் 277, பஞ்சாபி பாக் 299, பத்பர்கஞ் 305, லோதி ரோடு 225, டெல்லி ஐடிஓ 305 மற்றும் துவாரகா 290 என காற்றின் தரம் மொத்தமான பிரிவிலே நீடிக்கிறது.

நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் வெடிக்க டெல்லியில் முழுமையான தடை அமலில் இருந்தாலும் கூட ஒரு சில இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடிய காட்சிகளை இப்போதிலிருந்தே பார்க்க முடிகிறது. இவை நாளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவை மட்டுமல்லாமல் டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை மாறாக டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானா அரசுக்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் அண்டை மாநிலங்களின் வெடிக்கப்படும் பட்டாசுகளின் காரணமாக அதிகரிக்கும் நச்சுப்புகை டெல்லியில் அடுத்து வரக்கூடிய நாட்களில் காற்று மாசுபாட்டை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Exit mobile version