மூச்சு விடத் திணறும் டெல்லி… அதிகரித்த காற்று மாசுபாட்டால் அச்சம்!!

டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்கு சென்றது; டெல்லிவாழ் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி, டெல்லியில் எதிரில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட போது பட்டாசு வெடித்தன் காரணமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் காற்று மாசுபாட்டினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்று; தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றுமாசு அதிகம் ஏற்படும் என டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்து இருந்த நிலையில் பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், தடையை மீறி நேற்று இரவு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டே தான் இருந்தனர். இதன் காரணமாக டெல்லி கடுமையான காற்று மாசுபாட்டை சந்தித்து உள்ளது.இதன் காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை 11 மணி நிலவரப்படி டெல்லியின், ஆனந்த் விஹார்-902,நொய்டா-905, அசோக் விஹார்-471, இந்தியா கேட்-496, நியூ டெல்லி-451,மந்திர் மார்க்-484, ஆர்.கே புரம்-311,ஜவஹர்லால் நேரு அரங்கம்-473,பூசா சாலை -511 என டெல்லியின் உட்பகுதியில் அதிக அளவில் காற்று மாசுபாடும், டெல்லியின் வெளிப்புற பகுதிகளில் அபாயகரமான நிலையில் காற்றின் தரம் உள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள மொத்த காற்று மாசுபாட்டில் 31% அண்டை மாநிலங்களால் ஏற்பட்ட காற்று மாசு என டெல்லி மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இந்த காற்றின் தரம் நவம்பர் 7ம் தேதி மாலை முதல் படிப்படியாக ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் மாநிலத்தில் தேவையற்ற பொருட்களை எரிப்பதற்கு தடை விதித்து இருப்பதாக டெல்லி கார்ப்பரேஷன் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

Exit mobile version