இப்படியா செய்வீங்க… ஒப்பந்ததாரரிடம் கொந்தளித்த தருமபுரி எம்.பி

தருமபுரி மாவட்டம் அரூர் அரசுப் பள்ளியில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி நவீன கழிப்பிடம் கட்டித் தராததால் அதனை திறந்துவைக்காமல் ஒப்பந்ததாரரை எச்சரித்துவிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திரும்பிச் சென்றார்.

அரூர் அரசுப் பள்ளியில் நவீன கழிப்பிடம் கட்ட நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. கழிப்பறையின் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் அதனை திறந்துவைக்க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சென்றார். அப்போது அவசர கதியில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நவீன முறையில் கட்டப்படாததால் திறந்துவைக்க மறுப்பு தெரிவித்த செந்தில்குமார், விரைவாக அனைத்து பணிகளையும் ஒழுங்காக முடிக்கும்படி கூறிவிட்டு எச்சரித்துச் சென்றார்.

Exit mobile version