எட்டு வருடங்களுக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி, பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இதில் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. குறிப்பாக போட்டியில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது.
சிஎஸ்கே -வின் மொயின் அலி 3 விக்கெட் வீழ்த்தினார் . இதைத்தொடர்ந்து ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ,அவர் பீல்டிங்கில் நின்ற திசைகளில், 4 கேட்ச்களை பிடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதோடு அவர் பவுலிங் செய்த, 4 ஓவர்களில் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜடேஜாவை பற்றி ,தோனி பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று, தற்போது வைரல் ஆகியுள்ளது.
அதில் ‘பீல்டிங் செய்யும் ஜடேஜா, கேட்ச் பிடிப்பதற்காக ஓடவில்லை’, ‘பந்துகள் ஜடேஜாவை தேடி வருகிறது’, என்று தோனி பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ட்விட்டர் பதிவு நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஜடேஜா விக்கெட்டுகளை கைப்பற்றியதை தொடர்புப்படுத்தி, நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.