ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வாக்குசாவடியில் திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ! வெளியான பரபரப்பு காட்சி

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை வாக்குச்சாவடியில் அதிமுக, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வாக்காளர்கள் வாக்குசாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ராணிபேட்டை மாவட்டம் வாலாஜி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிப்காட் அரசினர் உயர்நிலை பள்ளியில் உள்ள ஒரு வாக்குசாவடி மையத்தில் தேர்தலில் போட்டியிடும் ஒரு தரப்பினர் வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் ஜன்னல் வழியாக வாக்கு செலுத்துமாறு கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக திமுக, அதிமுகவினர் இடையே வாக்குசாவடி வளாகத்திலேயே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version