அன்றே சொன்ன திலகபாமா; திண்டுக்கல்லில் திடீரென வேலையை ஆரம்பித்த திமுக!

thilagabama

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது பாமக வேட்பாளர் திலகபாமா திண்டுக்கல் மக்களுக்கு கொடுத்திருந்த மிக முக்கியமான வாக்குறுதியின் பலத்தை புரிந்து கொண்டு தற்போது திமுக அதனை கையில் எடுத்துள்ளது.

திண்டுக்கல்லில் ரூ.5.50 கோடி மதிப்பில் 54 கடைகளுடன் லிப்ட்,கழிப்பறை, டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் பூ மார்க்கெட் கட்டப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதாவது, திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏற்கனவே செயல்படும் பூ மார்க்கெட்டை இடித்துவிட்டு அதே இடத்தில் ரூ.5.50 கோடியில் 54 கடைகள், 2 இடங்களில் லிப்ட், கழிப்பறை, டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் பூ மார்க்கெட் அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இதை தொடர்ந்து பூ மார்க்கெட் வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தி தற்காலிக பூ மார்க்கெட் எங்கே நடத்துவது என கருத்து கேட்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஒத்துழைப்பு வழங்கியதை தொடர்ந்து புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதியில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை கண்டறிந்து, அதற்கான வாக்குறுதிகளை அளித்தார்.

அப்போது திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, நவீன வசதிகளுடன் கூடிய மலர்ச்சந்தை அமைத்துத் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். திண்டுக்கல் மல்லிகை உள்ளிட்ட மலர்கள் அதிகம் விளையக்கூடிய பகுதி என்பதால் அங்குள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் மலர் சந்தை அமைத்துத் தரப்படும் என திலகபாமா வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட திமுக அரசு, தற்போது அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு,
திமுக, அதிமுக, காங்கிரஸ் என மாறி மாறி திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றி இருந்தாலும் இதுவரை சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத இவர்கள், பாமகவின் வாக்குறுதிகள் பொதுமக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து இப்போது செயல்படுத்த தொடங்கி உள்ளனர்.

பாமகவின் நிழல் நிதி அறிக்கையை ஏற்கனவே ஆளுங்கட்சிகள் பின்பற்றி வருகின்றன. தற்போது திண்டுக்கல் தொகுதியில் ஆளுங்கட்சியை வழிநடத்தும் பாமக, தமிழ்நாட்டை வழிநடத்தும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version