தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது.
வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் “கடற்பசு பாதுகாப்பகம்“ அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை செயல்படுத்தும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம், 4டி அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், வாகன நிறுத்துமிடம், செல்ஃபி பாயிண்ட், குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
