14 வயது சிறுமியை ஆறு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்…

ஒடிஷா மாநிலம் ராயகடவில் உள்ள காவல் நிலையத்திற்கு 14 வயது சிறுமி புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தன்னை ஆறு மாதங்களுக்கு முன்பு ஆறுபேர் சேர்ந்து கற்பழித்து விட்டதாகவும், இப்போது நான் ஆறுமாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

புகாரை பெற்றுக்கொண்டு போலீசார் அந்த பெண்ணிடம் நடந்த விஷயத்தை விரிவாக கேட்டனர்.அவர் சொன்னதைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள்.

அந்த பெண் அவர் வீட்டு பகுதியில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த ஆறு பேர் அந்த பெண்ணை பலவந்தமாக அங்குள்ள புதர் பக்கம் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் பயந்து கொண்டு இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். பிறகு நாளாக நாளாக அவர் கர்ப்பமானர் இதனால் விஷயம் வெளியே தெரிந்தது.

இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்நிலையம் சென்று ஆறு பேர் மீதும் புகார் அளித்தார். அவர்கள் மீது போக்ஷோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறு பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Exit mobile version