மகாத்மா காந்தி அணிந்த தங்க பிரேம் கண்ணாடிகள் ஏலத்தில் விற்பனை: தொகையைப் பார்த்து உலக நாடுகள் வியப்பு!
மகாத்மா காந்தி என்றாலே நம் மனதிற்குள் வருவது அவரது அஹிம்சா அணுகுமுறை மற்றும் எளிமை தான். அவரது கதர் ஆடையும், வட்டமான மூக்கு கண்ணாடிகளும் அவரது பெயருக்கு அடையாளமாய் விளங்கின. தற்போது லண்டனில் பாதுகாக்கப்பட்டு வந்த அவரது 2 மூக்கு கண்ணாடிகள், ஏலத்தில் இந்திய மதிப்பில் 2 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்ணாடி அணிய ஆரம்பித்தார் என்று கூறப்படுகிறது. அதன் பின் 1920 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் வாசித்த போது பிரிட்டிஷ் பெட்ரோலியத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது கண்ணாடியைக் கொடுத்திருக்கிறார். அவர்களது குடும்பம் அதை மிக பத்திரமாக பாதுகாத்து வந்தனர்.
ஒருகட்டத்தில் அந்த கண்ணாடியை ஏலம் விடவும் முடிவு செய்துள்ளனர்.. அதன்படி ஈஸ்ட் பிரிஸ்டல் ஏல நிறுவனத்தின் மூலம் இது ஏலம் விடப்பட்டது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸ்டோவ் என்பவர் அதற்கான முயற்சியை சில தினங்களுக்கு முன்பு மேற்கொண்டார். இதை பற்றி அவர் சொல்லும்போது, ”காந்தி தன்னிடம் ஏதாவது கூடுதலாக இருந்தால் அதை தேவைப்படுவோருக்குக் கொடுத்து விடுவார்.. அப்படித்தான் இந்தக் கண்ணாடியையும் , தற்போது அதை விற்பனைக்குக் கொண்டு வந்தவரின் உறவினரிடம் கொடுத்துள்ளார்.
இந்த கண்ணாடியை ஏலத்தில் வாங்குவதற்கு இந்தியாவில் எத்தனையோ பேர் விரும்புவார்கள்.. ஆனால், அதிர்ஷ்டவசமாக, அந்த மூக்கு கண்ணாடி எங்களிடம் வந்து சேர்ந்தது. வெறும் காகிதத்தில் இது பாதுகாக்கப்பட்டாலும், தங்கள் நிறுவனத்திலிருந்து ஏலத்திற்கு விற்பனையாகும் பொருட்களில் காந்தியின் கண்ணாடி மிக முக்கியமானது” என்று பெருமிதத்துடன் தெரிவித்துக்கொண்டார்..
பல நாடுகள் கலந்து கொண்டு கடும் போட்டிக்குப் பிறகு இந்த தொகைக்கு விற்கப்பட்டிருப்பது சிறப்பான செய்தி. காந்தியின் பெயருக்கும், அவர்மேல் உலகத்தார்க்கு இருக்கும் மதிப்பிற்கும் இந்த சம்பவம் எடுத்துக்கட்டாகவே விளங்குகிறது