இனி வெள்ளிக்கிழமையும் லீவ்: கூகுள் ஊழியர்கள் பெருமகிழ்ச்சி!

கூகுள் நிர்வாகம் ஊழியர்களின் கூட்டு நல்வாழ்விற்காக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று இணையத்தளத்தில் பலரும் பேசி வருகின்றனர்.

இந்த கொரோனா காலத்தில் அனைவரது மனதை அமைதிப்படுத்தவும், அழுத்தமின்றி வாழவும், இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது என்று கூகுள் தெரிவிக்கிறது.

மேலாளர்கள் அனைவரும், இதற்கேற்றவாறு பணிகளை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது புதிதாக வெள்ளிக்கிழமை லீவ் என்பதால், ஊழியர்கள் தங்களது விடுமுறை திட்டங்களை மீண்டும் சரி பார்த்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூகுள் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. வெள்ளிக்கிழமை மிக முக்கிய வேலை ஏதாவது வந்துவிட்டால், அடுத்த வேளை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுந்தர் பிச்சை

வாடிக்கையாளர் சேவைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சலுகை இப்போது இல்லையென்றாலும், இது போன்ற வேறு ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நல்ல முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டி மகிழ்கின்றனர். இந்த திட்டத்தை எல்லா நிர்வாகங்களும் எப்போதும் செயல்படுத்த வேண்டும், அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

இப்போது கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். 2021ஆம் ஆண்டு பாதி வரை இவ்வாறு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version