தமிழகத்தில் மீண்டும் கனமழை; வரும் 5-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் நாளை (03.12.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 04 ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 05 ஆம் தேதி அதே பகுதியில் குறைந்த காற்று தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சாதகமான நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் பரவலாக மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், நாளைய தினம் தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version