டெல்லியில் 65 ஆண்டுகள் இல்லாத அளவு கொட்டித்தீர்த்த கனமழை!!

அக்டோபர் மாதத்தில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினம் டெல்லியில் கன மழை கொட்டித் தீர்த்தது.

டெல்லி,
தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் 93.4 மிமி மழையானது பொழிந்துள்ளது. கடந்த 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் 111 மிமி மழை பெய்தது இதுவரை அதிக அளவாக இருந்தது. அதே ஆண்டு தான் அக்டோபர் மாதம் முழுவதும் 238.3 மிமி மழை பெய்தது இதுவரை செய்த அதிகபட்ச மழையாக இருந்து வந்தது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தலைநகர் டெல்லியில் பருவமழை முடிந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அக்டோபர் மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது.மேலும், அக்டோபர் 20ஆம் தேதிக்கு மேல் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரிக்கும் கீழே ஆக குறையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Exit mobile version