குரங்கம்மை நோயால் ஆண்களுக்கே அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே உடலுறவை தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய குரங்கம்மை நோயால் அந்நாட்டில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது. தோலோடுதோல் தொடுவதன் மூலமாகவும், நோய் தாக்கம் உள்ளவர்களின் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாகவும் நோய் பரவுவதாக சுகாதார தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலுறவு கொள்வதன் மூலமாக இந்த நோய் அதிகம் பரவியுள்ளதாக இதுவரை நடந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.காய்ச்சல், உடல்வலி, சோர்வு, கொப்பளங்கள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக இருக்கிறது. கொரோனாவை காட்டிலும் இதனால் ஏற்படும் வலிகள் அதிகம் என்கின்றனர, பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உடலுறவு கொள்வதை தவிருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.
