செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகல தொடக்கம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தேசியக்கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு உரையை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு மாமல்லபுரம் சிற்பத்திலான நினைவுப்பரிசை வழங்கினார். நடிகர் கமல்ஹாசனின் குரலில் (ஆங்கிலத்தில்) தமிழர்களின் பெருமைகள் குறித்த காட்சிப் படத்தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.

அதில், தமிழர் பாரம்பரியத்தின் அடையாளமாக திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் விளங்குகின்றனர்; உலகின் மிகவும் பழமையான இலக்கண நூல்களில் ஒன்று தொல்காப்பியம்; வாழும் இடங்களை ஐந்திணைகளாக பிரித்து தமிழர்கள் வாழ்ந்தனர்; ஏறு தழுவுதல் வீர விளையாட்டின் பாரம்பரியம் கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது; தமிழர்கள் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது சிலம்பம் ஒரு சான்று; இந்திய பெருங்கடல் மார்க்கமாக ராஜேந்திர சோழன் கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று ஆட்சி செய்தார்; முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணையை கட்டியது உள்ளிட்டவை குறித்த வரலாறு முப்பரிமாண காட்சிகளுடன் விளக்கப்பட்டது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version