டிவி பார்த்துக்கொண்டே விஷ தக்காளியை சமைத்து சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, பால்கல்வாடி பகுதியை சேர்ந்தவர் ரேகாதேவி (35) கடந்த வாரம் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டார். பின் சில மணி நேரத்தில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது வீட்டுக்கு வந்த அவரது கணவர் நவுசாத், மனைவி ரேகாதேவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.
இந்த நிலையில், ரேகா தேவி விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் இறந்து போனது தெரியவந்துள்ளது. அதாவது, சம்பவத்தன்று அவர் டிவியை பார்த்துக்கொண்டே, எலியை கொல்ல வைக்கப்பட்டிருந்த எலிமருந்து தடவிய தக்காளியை சமைத்து நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிவி பார்த்துக்கொண்டு சமைப்பவர்களே உஷாராக இருங்க.
