ஒருபாட்டில் சரக்கு வாங்கினால் இரண்டு பாட்டில் சரக்கு இலவசம் என்ற அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. மது விற்பனை கடைகளுக்கான லைசென்ஸ் பெற புதிய நடைமுறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மதுபான கடை கடைகள் நாளை (ஆகஸ்டு 1) முதல் மூடப்படுகிறது.
இந்நிலையில் இருப்பு வைத்துள்ள மதுபாட்டில்களை விற்பனை செய்ய தனியார் மதுபான கடைகள் முடிவுசெய்தன. இதனையடுத்து, ஒரு பாட்டில் சரக்கு வாங்கினால் இரண்டு பாட்டில் சரக்கு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அறிவிப்பு வந்ததுதான் தாமதம் உடனே மதுப்பிரியர்கள் கூடிவிட்டனர். பின்பு தங்களுக்கு பிடித்தமான மதுவை வாங்கிச் சென்றனர். மதுபாட்டில்கள் சற்று நேரத்திலேயே தீர்ந்து போயின. குறிப்பாக பீர் பாட்டில்கள் உடனே விற்று தீர்ந்தன. மதுக்கடைகள் முன்பு கூடிய கூட்டத்தால் திருவிழா நகரம் போல் டெல்லி காட்சியளித்தது.
