ஆகஸ்டு 9 &10ம் தேதிகளில் மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்த வாரம் பவித்ரோற்சவம் நடைபெறவுள்ளது. இதையடுத்தும், ஆகஸ்டு 7 முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட் (₹300) நாளை வெளியிடப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு தொடங்கும். மேலும், பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆகஸ்டு 9 மற்றும் ஆகஸ்டு 10 ஆகிய நாட்களில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.