வேளாங்கண்ணி கடலில் குளிக்கத் தடை

வேளாங்கண்ணி திருவிழாவின் போது கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஜூலை 29ம் தேதி தொடங்கிய நிலையில் செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ஆட்டோக்களில் கட்டணம் வரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அருண் தர்மராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி கடற்கரையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள் கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் வெளிநாடு நபர் தங்கினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version