சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 2000 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது
கொரோனாவை ஒழிக்கும் பொருட்டு தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
