கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுதினம் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாந்தியின் 4ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப்பேரணியில் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவில், அண்ணா நினைவிடத்தில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பிறகு கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

Exit mobile version