தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூன் 20ம் தேதி தொடங்கிய நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 19ம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பின் சிபிஎஸ்இ தேர்வுமுடிவுகள் வெளியாக தாமதம் ஆனதால் ஜூலை 27ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி (ஆகஸ்டு 25) முதல் அக்டோபர் 21ம் தேதிவரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை, அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் கலந்தாய்வு சமூகநீதி அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சமடைய வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
