நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசியதால் பரபரப்பு

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதால் இந்த செருப்பு வீச்சு தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Exit mobile version