பஸ்ஸில் இதெல்லாம் செய்யக் கூடாது ஆண்களுக்கு எச்சரிக்கை

மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை செய்து தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது: பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை முறைத்துப்பார்த்தல், கூச்சலிடுதல், பாடல்களை பாடுதல், விசில் அடித்தல்,கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய செய்கை, வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்களை எடுத்தல் ஆகியவை கூடாது. நடத்துநர் எச்சரிக்கை விடுத்தப்பின் புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

பெண் பயணி பேருந்தில் பயணிக்கும் போது பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகளை கேட்கக்கூடாது. வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும். நடத்துநர் இல்லாதபோது இந்த புத்தகத்தை பராமரிப்பது ஓட்டுநரின் பொறுப்பு. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version