தூங்கும்போது கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்

ஆட்டை வெட்டுவதாக நினைத்து தூங்கும்போது ஆணுறுப்பை வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின் அஸ்ஸின் போசு பகுதியை சேர்ந்தவர் கொபி அட்டா (47) விவசாயி. இவர் கடந்த 12ம் தேதி தூங்கிக்கொண்டிருக்கும் போது ஆட்டை வெட்டுவதாக எண்ணி தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மனைவி அட்வோ கொனொடு, “நான் வெளியில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. என் கணவரின் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் கொட்டி கொண்டிருந்தது. உடனடியாக ரத்த போக்கை நிறுத்துவதற்காக டையப்பர் அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் என்றார். அவருக்கு கொம்போ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 வாரங்களுக்கு பின் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய கொபி,“ சேரில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, சமைப்பதற்காக ஆட்டை வெட்டுவது போல கனவு வந்தது. தூங்கிக் கொண்டிருந்த போது என் கையில் கத்தி எப்படி வந்தது என்று தெரியவில்லை. அதுதான் குழப்பமாக இருக்கிறது” என்று கூறினார்.

குறிப்பு: கனவு காணும் நண்பர்கள் படுக்கைக்கு பக்கத்தில் கத்தி இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

Exit mobile version