ஆண் குழந்தை வேண்டுமென்றால் பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு மதியிழந்த குடும்பம்

மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என இளம்பெண்ணை, அவரது கணவரும், மாமியாரும் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குழந்தை பிறந்தால் ஆண்குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அக்குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த நிலையில் மந்திரவாதி ஒருவரை சந்திக்க மாமியார் வற்புறுத்தியதில், கணவனும், மனைவியும் மந்திரவாதியை சந்திக்க சென்றுள்ளனர்.அப்போது அந்த மந்திரவாதி ஆண்குழந்தை வேண்டும் என்றால் பொது இடத்தில் உள்ள அருவியில் நீங்கள் வெட்டவெளியில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதற்கு அந்த இளம்பெண் மந்திரவாதி கூறுவதுபோல் என்னால்  நடக்க இயலாது எனக்கூற, நீ நிர்வாணமாக குளிக்க வேண்டும் என கணவரும்,மாமியாரும் வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதும். அவர் கையெழுத்தை போலியாக போட்டு ₹75 லட்சம் பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version