தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை,கரூர், சேலம், ஈரோடு நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
