விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. மேலும், நாளை முகூர்த்த தினம் என்பதால், சென்னையில் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு இன்று 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாலை 4 மணி முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் ரயில் நிலையம் & பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.மேலும், வேளாங்கன்னி கோயில் திருவிழா தொடங்கி இருப்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

Exit mobile version