மீனவர்களுக்கான உதவித்தொகைகள் உயர்வு – அரசு அறிவிப்பு

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் மீனவர் நலத்துறை & கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250-லிருந்து 350-ஆக உயர்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 15,000-ல் இருந்து 25,000-ஆக உயர்தப்பட்டுள்ளது என்றும், திறனறி தேர்வு திட்டதின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version