இந்த ஆண்டு யுஏஇ-யில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 3 வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.

நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிந. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஷிகர் தவாண் சதம் அடித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.
மேலும் இந்த ஐபிஎல். சீசனில் அடிக்கப்பட்ட 3-வது சதம் இது ஆகும். இதுவரை நடைபெற்ற 34 ஆட்டங்களில் 3 சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டு உள்ளது.அந்த 3 சதங்களும் அடித்தது இந்திய பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு பஞ்சாப் அணியை சேர்ந்த கே.எல்.ராகுல் (132) மயங்க் அகர்வால் (106) ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர்.
கேஎல ராகுல் சதம் அடிக்கும்போது பஞ்சாப் அணி, பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.
மயங்க் அகர்வால் சதம் அடிக்கும்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பஞ்சாப் அணி தோல்வி கண்டது.