ஐபிஎல்-2020 ; இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்

இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்

ஐபிஎல் 2020 போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்மோதவுள்ளன.

பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

ரோஹித் சர்மா தலைமயிலான மும்பை அணி இதுவரை இந்த சீசனில் 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா அணி மொத்தம் 7 போட்டிகளில் விளைடில் 4 ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில் மும்பை 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, கொல்கத்தா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்திலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Exit mobile version