இஸ்ரோ மாண்டஸ் புயலின் புகைப்படத்தை வெளியிட்டது!

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 10-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட மாண்டஸ் புயலின் புகைப்படத்தை இஸ்ரோ தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி54 ராக்கெட்டில் அனுப்பிய ECO-06 செயற்கைக்கோள் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் நகர்வை செயற்கைக்கோள் மூலம் அறிந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Exit mobile version