கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில், ஹொய்சாலா கட்டடக் கலையில் கட்டப்பட்ட சமண கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பார்ப்பதற்கு சமண கோயிலைப் போன்று தோற்றமளிக்கும் மிகப் பழமையான கட்டடக் கலையில் கட்டப்பட்ட ஹோய்சாலா காலக் கோயில், கர்நாடக மாநிலம் பெலுர் தாலுகா, ஷாந்திநாதா பசடி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தொல்லியல் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனென்றால் ஹொய்சாலா ஆட்சியாளர்கள் சமண மதத்தையும் ஆதரித்தனர் என்பதை இது காட்டுகிறது.
இந்தப் பகுதியில் தொல்லியல் துறையின் மண்டல இயக்குநர் டாக்டர் ஜி. மகேஷ்வரி தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முதல் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு அகழாய்வுப் பணிகள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.