இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தேர்வு
துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ள தமிழக இளைஞர் சேலம் நடராஜனுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். நடராஜனைத் தொடர்புகொண்டு பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் மேலும் பல உயர்வுகளைப் பெறவும், வெற்றிகளைக் குவிக்கவும், அவர் மூலமாக இந்திய அணிக்குப் பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன். நடராஜனின் அனைத்துக் கனவுகளும் நிறைவேற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

Exit mobile version