தமிழக அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் மற்றும் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேல் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது.இதனால் பேருந்து உள்ளிட்ட பொதுசேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரம பட்டனர்.இதையடுத்து பொதுமக்களின் அவசர பயணங்கள் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் உள்ளே மற்றும் இடையே மட்டும் செல்ல அனுமதி அளித்தது.
அதன்படி 5 மாதங்களும் பிறகு அரசு பேருந்து போக்குவரத்து இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க தொடங்கியது.தொடர்ந்து இயக்கப்பட்டாலும் கொரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் பயணிக்க பெரிதாக ஆர்வம் காட்டாவில்லை.அதனிடையே மக்களுக்குள் பேருந்து கட்டணங்கள் உயர்கிறது என்ற வதந்தியும் பரவி வருகிறது.இந்த நிலையில் பல்லவன் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதுகுறித்து செய்தியாளர்களும் பேட்டியளித்தார்.
அதில்,அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அந்த மாவட்ட எல்லை பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும்.அதனை தவிர 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயங்கும் எனவும்,பயணிகளில் வசதிக்கு ஏற்ப புதிய பாஸ்கள் கொடுக்க தொடங்கிவிட்டது.பழைய பாஸ்களுக்கான கால வரைமுறை செப்டம்பர் 15 நீட்டிக்க பட்டுள்ளது.மேலும் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்த படுவதாக கூறப்படுவது வதந்தி மட்டுமே.கட்டாயம் பேருந்து கட்டணங்கள் உயர்த்த படாது.பயணிகளின் எண்ணிக்கைகளை பொறுத்தே பேருந்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.அதனை தொடர்ந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று கூறினார்.