டெல்லியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்ற ஒருவர் கைது; 80 கிலோ பட்டாசு பொருட்கள் பறிமுதல்….

டெல்லியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்ற ஒருவர் கைது; 80கிலோ பட்டாசு பொருட்கள் பறிமுதல்.

டெல்லி, கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் இந்த ஆண்டு பசுமை பட்டதாசு உள்ளிட்ட அனைத்து விதமான பட்டாசுகள் விற்கவும் வெடிக்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக பட்டாசு விற்பனையாளர்கள் நலன் கருதி கடந்த செப்டம்பர் மாதமே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு விற்பதற்கும் முழுமையான தடை விதிக்கப்படுவதாகவும், முன்கூட்டியே அறிவிக்கபடுவதற்கான காரணம் பட்டாசு விற்பனையாளர்கள் கொள்முதல் செய்த பின்பு தடை உத்தரவு பிறப்பித்தால் அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒரு மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டெல்லியின் நங்லோய் காவல் சரகத்திற்கு உட்பட பகுதியில் தடைசெய்யப்பட்ட பட்டாசு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து 80 கிலோவுக்கும் அதிகமாக தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை டெல்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. மேலும், தடை செய்யப்பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version