ஐந்து முறை உலக சாம்பியனான இவர், 51 கிலோ பிரிவில் கஜகஸ்தானின் ஜைனா ஷெக்கர்பெகோவாவை வீழ்த்தினார். 2012 இல் லண்டனில் ஒலிம்பிக் வெண்கலம் வென்றார் மேரி கோம்.

சமீபத்தில், இவரது வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இரட்டை சிறுவர்களின் தாயான மேரி கோம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர், சமூக ஊடக தளங்களில் அவரது ரசிகர்களால் “மகத்தான மேரி” என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
விளையாட்டு புள்ளிவிவர நிபுணர் மோகன்தாஸ் மேனன், “2002 ஆம் ஆண்டில் துருக்கியின் அன்டால்யாவில் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் முதன்முதலில் வெற்றி பெற்றார். தனது சர்வதேச குத்துச்சண்டை வாழ்க்கையில் மேரி கோமுக்கு இது15 வது தங்கம்” என்று கூறுகிறார்.