60 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காணாமல் போன கல்

ஸ்டோன் ஹெஞ்ச்(Stone Henge) என்பது இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்காலம் மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும் வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புகளையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். இத்தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகிறது.

 60 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்டோன்ஹெஞ்சில் ஒரு தொழிலாளி மறுசீரமைப்பின் போது  துளையிடப்பட்டு எடுக்கப்பட்ட கல் துண்டை வைத்திருந்தார். கடந்த ஆண்டு, தனது 90 வது பிறந்தநாளை முன்னிட்டு, கல்லை திருப்பி அனுப்பினார். அதைப் பற்றிய புதிய பகுப்பாய்வு இப்போது நடைபெற்று இந்த மாபெரும் கற்கள் எங்கு எடுக்கப்பட்டது என்ற  மர்மத்தைத் தீர்க்க உதவியுள்ளது.

துளையிடப்பட்ட இந்த கல் – கிட்டத்தட்ட ஸ்டோன்ஹெஞ்சின் மிகப் பெரிய கற்களுடன் வில்ட்ஷயரில் உள்ள வெஸ்ட் உட்ஸில் இருந்துள்ளது. இது அங்கிருக்கும் கற்கால நினைவுச்சின்னத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்தது என்று வேதியியல் பகுப்பாய்வு காட்டுகிறது. 

Exit mobile version