ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் முதலீடு: முபாடாலா நிறுவனம் 6,246 கோடி முதலீடு

ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் முபாடாலா நிறுவனம் 6,246  கோடி முதலீடு செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்தொகையை முதலீடு செய்தன.

இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. அத்துடன் முகேஷ் அம்பானி கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RIL) தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக்கின் இணை முதலீட்டாளர்கள் மேலும்ரூ.1875 கோடியை ரீடெயில் பிரிவில் முதலீடு செய்யப்போவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த முபாடாலா நிறுவனம் ரிலையன்ஸில் ரூ.6247 கோடியை முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முபாடாலா முதலீடு செய்துள்ளதன் மூலம்1,4 % பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் முபாடாலா நிறுவனம் ஏற்கனவே ஜியோவில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தகக்து.

Exit mobile version