ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது…

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்ளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. வீட்டில் இருந்தே போன் அல்லது கம்ப்யூட்டர் மூலம் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

ஆன்லைன் மூலமே மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுப்பதும், தேர்வு நடத்துவதும் வழக்கமாகி வருகின்றது. ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் படிப்படியாக நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்,பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது என்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிட கூடாது,என அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version