பெரியாரின் 49-வது நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி தந்தை பெரியாரின் உருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே உள்ளபெரியாரின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Exit mobile version