சாலை ஓரத்தில் திடீரென்று சுருண்டு விழுந்த பெண். வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சியான செயல்

காலை நடைப்பயணத்தின் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்த ஒரு கனேடிய பெண்மணி, அவரது வளர்ப்பு நாயால் உதவி பெற்ற சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த நாயானது தமது எஜமானியின் நிலையை உணர்ந்து உடனடியாக சாலை நடுவே சென்று போக்குவரத்தை நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவரே தமது வளர்ப்பு நாயால் அவசர மருத்துவ உதவி பெற்று மீண்டுள்ளார்.

Dog Saves Owner Who Had a Seizure by Blocking Road Until Help Arrived https://www.youtube.com/watch?v=ywmFtH0oEvo cr ctv news

மார்ச் 16 அன்று தமது செல்ல நாயுடன் காலை நடைப்பயணத்திற்கு சென்றுள்ளார் ஹேலி மூர். அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சாலை ஓரத்தில் அவர் சுருண்டு விழுந்துள்ளார்.

இதை கவனித்த அவரது வளர்ப்பு நாய் Clover, துரிதமாக செயல்பட்டு சாலை நடுவே சென்று, வாகனங்களை வழிமறித்துள்ளது. அப்போது அந்த வழியாக லொறியுடன் வந்த Dryden Oatway, தமது வாகனத்தை நிறுத்தி உதவ முன்வந்துள்ளார். வாகனத்தை நிறுத்தியது மட்டுமின்றி, தமது யஜமானிக்கு உதவி கிடைக்கிறதா என்பதையும் Clover ஒவ்வொரு நொடியும் உறுதி செய்துள்ளது.

Dog Saves Owner Who Had a Seizure by Blocking Road Until Help Arrived https://www.youtube.com/watch?v=ywmFtH0oEvo cr ctv news

இதனிடையே Dryden Oatway மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்து ஹேலி மூருக்கு முதலுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில், Clover ஹேலியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கும் பொருட்டு, சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தகவல் அறிந்து அவர்களே சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். ஹேலிக்கு திடீரென்று எப்படி வலிப்பு நோய் வந்தது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அவரது பெற்றோர், ஆனால் செல்ல நாய் Clover-ன் செயல் தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version